குமரியில் ரூ 12.97 கோடியில் சாலை பணிகள்

குமரியில் ரூ 12.97 கோடியில் சாலை பணிகள்
சாலைப் பணிகளை துவக்கிய அமைச்சர்
குமரியில் ரூ 12.97 கோடியில் சாலை பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான மாத்தூர் தொட்டி பாலத்திற்கு செல்லும் திருவட்டார் - மாத்தூர் சாலை அகலம் குறைந்த. சாலையாக இருந்தது. இந்த சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள், அரசு பேருந்துகள் அதிக அளவில் சென்று வருகின்றன

இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் தரப்பில் இருந்தது. இதை அடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த சாலையை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு 2.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்கான பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மாத்தூர் பகுதியில் தொடங்கி வைத்தார்.

இதேபோன்று மார்த்தாண்டம் - பேச்சிப்பாறை மாநிலச்சாலை, தக்கலை - தடிக்காரங்கோணம் சாலை, குலசேகரம் - கல்லடமாமூடு - அண்டூர் சாலை, இரவிப்புதூர் கடை - கருங்கல் சாலை உட்பட பல்வேறு சாலை பணிகள் மொத்தம் ரூ. 12 கோடியே 97 லட்சம் மதிப்பில் நேற்று அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

Tags

Next Story