சேலம் மாநகராட்சியில்ரூ.17¼ கோடியில் தார்சாலை பணிகள்

சேலம் மாநகராட்சியில்ரூ.17¼ கோடியில் தார்சாலை பணிகள்

சாலை பணிகள் துவக்கம் 

சேலம் மாநகராட்சியில்ரூ.17¼ கோடியில் தார்சாலை பணிகளை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை மற்றும் கொண்டலாம்பட்டி ஆகிய மண்டங்களில் ரூ.17 கோடியே 44 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அதன்படி அம்மாபேட்டை மண்டலத்தில் ரூ.8 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் வர்மா சிட்டி, ராஜகணபதி தெரு, கோபால் தெரு, செல்வா நகர், ராமநாதபுரம், புது தெரு, பெரிய கிணறு, குண்டு பிள்ளையார் கோவில் தெரு, திருநீலகண்டர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதேபோல் கொண்டலாம்பட்டி மண்டலத்தில் ரூ.8 கோடியே 89 லட்சம் மதிப்பில் தாதுபாய்குட்டை, குகை மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டிப்பட்டி ஏரி தெரு, பச்சியம்மன் கோவில் தெரு, நல்லாயி தெரு, நெய்மண்டி அருணாச்சலம் தெரு, களரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் உதவி ஆணையாளர் வேடியப்பன், செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ஓபுளிசுந்தர், சுமதி, உதவி பொறியாளர் பாஸ்கரன், கொண்டலாம்பட்டி மண்டலக்குழு தலைவர் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story