கிடப்பில் கிடக்கும் சாலை பணி

கிடப்பில் கிடக்கும் சாலை பணி

உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டி கிராமத்தில் கடந்த இரு மாதங்களாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.


உசிலம்பட்டி அருகே மீனாட்சிபட்டி கிராமத்தில் கடந்த இரு மாதங்களாக சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி ஊராட்சிட்குட்பட்டது மீனாட்சிபட்டி கிராமம். நல்லுத்தேவன்பட்டி முதல் லிங்கநாயக்கன்பட்டி செல்லும் வழியில் இக்கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு புதிய தார்சாலை அமைப்பதற்காக ஏற்கனவே இருந்த தார்சாலையை ஜேசிபி இயந்திரம் அகற்றின. அதன்பிறகு ஜல்லிகற்களை கொட்டி பரப்பியுள்ளனர். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதனால் அக்கிராமத்திற்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கால்நடைகளை தோட்டத்திற்கு அழைத்து செல்வதில் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையிட்டு விரைவில் தார்சாலை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் வெங்கடேஷ் கூறுகையில், நல்லா இருந்த தார்சாலையை புதிய தார்சாலை அமைக்க போவதாக கூறி இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையை தோண்டி, ஜல்லிகற்களை கொட்டிவிட்டு சென்று இரு மாதங்களை கடந்துள்ளது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் தொடங்கவில்லை, இதனால் அப்பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். சம்பந்த ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் இது வரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags

Next Story