சாலை மறியல்
இந்திரா நகர் பகுதிப்பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்குமாறு வலியுறுத்தி, செய்யாறு - வந்தவாசி ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இந்திராநகர் பகுதி மக்கள் சாலை மறியல், நத்தம் புறம்போக்கில் உள்ள ஆக்கிரமிப்பு கொட்டைகளை அகற்றி விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் கோரிக்கை. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் 3 நபர்கள் கொட்டைகைகள் அமைத்து பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளதாக தெரிகிறது இது குறித்து தகவல் அறிந்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் செய்யாறு - வந்தவாசி சாலையில் தீடிர் சாலை மறியல் செய்தனர். மேலும் கிராமத்தில் விளையாட்டு திடல் அமைக்க இடம் ஒதுக்கி தர வலியுறுத்தினர்இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கலைத்தனர்.