சாலை மறியல்

சாலை மறியல்

ஆற்காடு அருகே 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. 

ஆற்காடு அருகே 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

தரக்குறைவாக பேசிய 100 நாள் வேலை திட்ட ஒன்றிய மேற்பார்வையாளரை கண்டித்து 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு உண்டானது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த புதுப்பாடி கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை தரக்குறைவாக பேசிய ஒன்றிய மேற்பார்வையாளர் கௌரி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுப்பாடி கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஏரி தூர் வாரும் பணியில் ஊழியர்கள் ஏராளமானோர் பண்ணியாற்றி வருகின்றனர். இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இன்று ஒன்றிய மேற்பார்வையாளர் கௌரி என்பவர், ஏரி தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது ஊழியர்களிடம் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஆற்காடு - கலவை செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆற்காடு தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story