ஜெயங்கொண்டம் அருகே தரைப்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சாலைமறியல்
சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கல்லேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் காட்டுஓடை உள்ளது. இதன் குறுக்கே போக்குவரத்து பயன்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தரைபாலம் அமைக்கபட்டது.
இந்நிலையில் அந்த தரை பாலம் சேதமடைந்த நிலையில் புதிய தரைபாலம் கட்டும் பணி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கபட்ட பணி இன்னும் முடிவடையாத நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமபடுவதாக கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது தரைப்பால பணிகளை விரைந்து முடிக்கக்கோரி வலியுறுத்தினர். இதனையறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்துவதாக கூறியதையடுத்து சாலைமறியல் கைவிடபட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.