உளுந்துார்பேட்டையில் உளுந்து விலை வீழ்ச்சி விவசாயிகள் சாலை மறியல்

உளுந்துார்பேட்டையில் உளுந்து விலை வீழ்ச்சி விவசாயிகள் சாலை மறியல்


உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் உளுந்து விலை வீழ்ச்சி அடைந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் உளுந்து விலை வீழ்ச்சி அடைந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டியில் உளுந்து விலை வீழ்ச்சி அடைந்ததால் ஆவேசமடைந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு வருவது அதிகரித்துள்ளது.கமிட்டியில் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவில் பொருட்களைக் கொண்டு வருகின்றனர். நேற்று முன்தினம் உளுந்து பயிருக்கு 10 ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது விவசாயிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனால் விவசாயிகள் நேற்று உளுந்து பயிரை மார்கெட் கமிட்டிக்கு அதிக அளவில் கொண்டு வந்தனர். ஆனால் நேற்று, 9,450 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஒரே நாளில் 1,000 ரூபாய் வீழ்ச்சி அடைந்ததால் அதிருப்தியடைந்த விவசாயிகள் மார்க்கெட் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து மாலை 4:00 மணியளவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கமிட்டி முன் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உளுந்துார்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 4:35 மணியளவில் மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story