கடல் சீற்றத்தால் சாலைகள் துண்டிப்பு - 6 கிலோமீட்டர் சுற்றி செல்லும் மீனவர்கள்
கடல் சீற்றம்
கடல் சீற்றம் காரணமாக நீரோடி பொழியூர் சாலை துண்டிப்பு. மீனவ கிராம மக்கள் 6 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை.
தென்மேற்கு பருவமழை முன்கூட் டியே துவங்கிய காரணத்தால் குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதியிலும், கேரள கடற்கரை பகுதியிலும் பலத்த மழையுடன் கடல் சீற்றம் காணப்பட்டது.இதன் காரணமாக இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூர், சின் னத்துறை, இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, மார்த்தாண்டன் துறை, நீரோடி ஆகிய மீனவ கிராமங்களை சார்ந்த பைபர் படகு மீனவர்கள், கரடி வலையில் மீன்பிடிக்க செல்பவர்கள் மீனபிடிக்க செல்லவில்லை.அதே வேளையில் மேற்கு கடற்கரை பகுதியில் இன்று முதல் அறுபது நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன்பிடி தொழிலுக்கு சென்ற விசைப்பட குகள் தேங்காபட்டினம் மீன் பிடி துறைமுகம் நோக்கி வந்த வண்ணம் உள்ளன.கொல்லங்கோடு அருகே நீரோடியிலிருந்து பொழியூர் செல்லும் சாலையில் கேரளபகுதியான தெற்கே கொல் லங்கோடு பகுதியில் உள்ள சாலையை அலை இழுத்து சென்றது. இதனால் நீரோடி - பொழியூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலை துண்டிக்கப்பட்ட பகுதியின் தமிழக பகுதியை ஒட்டி தெற்கே கொல்லங்கோடு புனித மேத்யூ தேவாலயத்திற்கும், பருத்தியூர் புனித மேரி தேவாலயத் திற்கும் சொந்தமான பொது கல்லறை தோட்டம் உள்ளது.சாலை துண்டிக்கப்பட்ட தால் பருத்தியூர் மற்றும் பொழி யூர் மீனவ கிராமத்தில் எவரே னும் இறந்தால் உச்சக்கடை, பழைய உச்சக்கடை, திருமன் னம் சந்திப்பு, நீரோடி வழியாக சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து தான் இறந்த வர் உடலை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான பொழியூர், தெற்கே கொல்லங்கோடு, பருத்தியூர் ஆகிய மீனவ கிராமங்களில் பதட்டமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளது
Next Story