பல்லாங்குழியான ஆற்காடு சாலை சீரமைப்பு
சாலைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டன
பழுதடைந்த ஆற்காடு சாலை மீண்டும் சீரமைக்கப்பட்டது.
சென்னை மாநகரின் பிரதான சாலைகளில் ஒன்றான ஆற்காடு சாலையானது போரூர், வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக தினமும், லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தற்போது, கோடம்பாக்கம் -போரூர் ஆற்காடு சாலையில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், சாலை குறுகலாகி நெரிசல் நிலவி வருகிறது. பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக மாறி இருந்தது. இதுகுறித்து கோரிக்கை வைத்தனர். வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சீர் செய்யப்பட்டன. சமீபத்தில் பெய்த மழையில், காரம்பாக்கம் ஆற்காடு சாலை பல இடங்களில் பல்லாங்குழியாக மாறி இருந்தது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்துகள் ஏற்பட்டன. இதையடுத்து, பல்லாங்குழியாக இருந்த சாலை சீர் செய்யப்பட்டது.
Next Story