சாலையோர தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

சாலையோர தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

சேலம் வ.உ.சி. மார்க்கெட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலையோர தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.


சேலம் வ.உ.சி. மார்க்கெட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சாலையோர தொழிலாளர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

- வ.உ.சி. மார்க்கெட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 70 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சாலையோர வியாபார தொழிலாளர்கள் சங்கத்தினர் வ.உ.சி. மார்க்கெட்டை திறந்தவெளியில் ஒப்பந்தம் விட வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று மாநகராட்சி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். இதில் வ.உ.சி மார்க்கெட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மாநகராட்சி நிர்வாகம் சுங்க வரி வசூலிக்க வேண்டும். ஏற்கனவே வ.உ.சி. மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட வ.உ.சி. பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் 16 பெண்கள் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story