கன்னியாகுமரி : டாக்டர் தம்பதி வீட்டில் கொள்ளை -இளைஞர் கைது

கன்னியாகுமரி : டாக்டர் தம்பதி வீட்டில் கொள்ளை -இளைஞர் கைது
கைதான ஆதித் கோபன்
கன்னியாகுமரியில் டாக்டர் தம்பதி வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நேசமணி நகர் அருகே டாக்டர் கலைகுமார் (52) என்பவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி (48) சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டராக உள்ளார். கடந்த 6-ம் தேதி இரவு இவர்கள் வீட்டில் இருந்து 90 பவுன் தங்க நகைகளையும் 3 லட்சம் ரொக்க பணத்தையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள 200 மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, அந்த பகுதியில் உள்ள கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ,சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்த நபர் கடைசியாக கேரளா நோக்கி பயணித்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படையினர் கேரளா விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் குமரி -கேரளா எல்லை பகுதி பாலராமபுரத்தை சேர்ந்த கோபகுமாரன் என்பவர் மகன் ஆதித்கோபன் என்ற முத்துகிருஷ்ணன் (30) என்பது தெரிய வந்தது.

ஆனால் அவர் இருப்பிடத்தை மாற்றி வந்துள்ளார். தமிழ்நாடு, கேரளா பகுதிகளில் இருந்து திடீரென பஞ்சாப் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்துள்ளார். இதை கண்டு கொண்ட போலீசார் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பஞ்சாபில் ஆதித்கோபன் தனிப்படையிடம் சிக்கினார். அவரை நாகர்கோவில் கொண்டு வந்து விசாரணை நடத்தி, அவரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story