ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் கொள்ளை !
வீட்டின் கதவை உடைத்து கொள்ளை
ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தில் கொள்ளை - போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் 5 ரோடு அடுத்த அமராவதி தெருவைச் சேர்ந்தவர் ஷோபா (45). இவர் அழகாபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 30ம் தேதி இரவு தனது நிறுவனத்தை பூட்டிச்சென்ற இவர்; மறுநாள் காலை வந்து பார்த்துள்ளார். அப்போது, நிறுவனத்தின் பணம் வைக்கும் அறை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதிலிருந்த ரூ1.15 லட்சம் பணம் மற்றும் அரைப்பவுன் தங்க காசு மாயமாகியிருந்தது. இதனையடுத்து அங்கு வைக்கப்பட்டுள்ள சிசி.டிவி கேமரா பதிவுகளை பார்த்தார். இதில் 2 மர்மநபர்கள் நிறுவனத்திற்குள் புகுந்து பணம் மற்றும் தங்க காசை எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அழகாபுரம் போலீசில் ஷோபா புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story