இன்ஜினியர் வீட்டில் கொள்ளை

இன்ஜினியர் வீட்டில் கொள்ளை

கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் இன்ஜினியர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ,நாகர்கோவில் , பார்வதிபுரம் பகுதி ராஜீவ் நகரை சேர்ந்தவர் வினோத் சைமன் (72) தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வினோத் வினோத் சைமன் குடும்பத்துடன் நேற்று இரவு 9:30 மணிக்கு ஒரு தியான கூட்டத்திற்கு தன குடும்பத்துடன் தியானத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் இன்று அதிகாலை ஐந்து மணிக்கு மேல் அவர் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து லாக்கரையும் உடைத்து அதில் பாதுகாப்பாக இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகள், ரூபாய் 10 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இன்ஸ்பெக்டர் காசி பாண்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் நாகர்கோவில் ஏ எஸ் பி யாங்சென் டோமா பூட்டியாவும் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். வினோத் சைமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் இரவு தியானத்திற்கு சென்றுள்ளார் என்ற தகவல் அறிந்து யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் அந்த கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story