விருதுநகரில் சிறை காவலர் வீட்டில் கொள்ளை

விருதுநகரில் சிறை காவலர் வீட்டில் கொள்ளை

காவல் நிலையம் 

விருதுநகரில் சிறை காவலர் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் கணேஷ் நகர் பரந்தாமன் தெருவை சார்ந்தவர் முனிகண்டன்.இவர் அருப்புக்கோட்டை கிளைச் சிறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனது குடும்பத்துடன் கடந்த 14ஆம் தேதி கும்பகோணத்திற்கு கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது, சென்றுவிட்டு 15ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது வீட்டின் முன் கேட்டு திறந்து தலைவாசல் கதவு மற்றும் மொட்டை மாடி கதவு பாட்டுலக் உடைக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டில் உள்ளே பீரோ மற்றும் பூஜை அறையில் உடைக்கப்பட்டு பெட்ரூம் அலமாரி லாக்கரில் பூட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜோடி கொலுசு மற்றும் அறை பவுன் ஜோடி கம்மல் மற்றும் 65 ஆயிரம் மொக்கை பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து அவர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காணாமல் போனார் ரொக்க பணம் மற்றும் நகையின் மதிப்பு 95 ஆயிரம் எனவும், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்

Tags

Next Story