சுப்புலட்சுமி ஜெகதீசன் பண்ணை வீட்டில் கொள்ளை
சுப்புலட்சுமி ஜெகதீசனின் பண்ணை வீடு
திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் துணை பொதுச்செயலாளரான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் பகுதியில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. இந்த தோட்டத்தை கவனித்து கோவிந்தராஜ் என்பவர் கவனித்து வரும் நிலையில் ,நேற்று காலை பண்ணை வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து மலையம்பாளையம் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல்துறை சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் டேபிள் டிராயரில் இருந்த ரூ.50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. அந்தப் பணம் தோட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருப்பது என தெரிய வந்தது.சம்ப இடத்தில் மோப்பநாய் மற்றும் கைரேகை பிரிவின் உதவியுடன் விசாரணை நடத்தினர்.இந்த கொள்ளை குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.