சிவகங்கை கூட்டுறவு கடன் சங்கத்தில் கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை
கொள்ளையடிக்க முயன்ற கூட்டுறவு சங்கம்
சிவகங்கையில் இருந்து மானாமதுரை செல்லும் சாலையில் உள்ளது கீழக்கண்டனி கிராமம். இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சுற்று வட்டார விவசாயிகள் தேவையான உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதுடன், நெல் கொள்முதல் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
மேலும் விவசாயிகளுக்கு தங்க நகைகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேளாண் கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை துண்டித்தும் கதவினை உடைக்க முயற்சித்த போது எச்சரிக்கை ஒலி ஒலித்துள்ளது. இதுகுறித்து எச்சரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்றதை அடுத்து விரைந்து வந்த கூட்டுறவுச் செயலாளர் வந்து பார்த்தபோது கொள்ளை முயற்சி தெரியவந்தது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தப்பிச்சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் காவல்துறையினர் குற்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறி வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்