ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: வேலூர் ஆசாமி கைது

ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சி: வேலூர் ஆசாமி கைது

 ஷகில்

உளுந்துார்பேட்டை அருகே ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கெடிலம் கிராமத்தில் இந்தியன் 1 ஏ.டி.எம்., மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு நுழைந்த மர்ம நபர், ஏ.டி.எம்., மை உடைத்து கொள்ளை அடிக்க முயன்றார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் திருநாவலுார் போலீசார் விரைந்து சென்று, மர்ம நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வேலுார் மாவட்டம் சைதாப்பேட்டையைச் சேர்ந்த அன்வர் மகன் ஷகில், 36; என்பதும், வேலுார் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஷகிலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story