ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

ராஜாக்கமங்கலம் அருகே கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

கொள்ளையடிக்கப்பட்ட கோவில் உண்டியல்


ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சூரப்பள்ளம் ஊர் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. மண்ட பத்துடன் கூடிய இந்தக் கோவிலில் தினமும் மாலையில் கோவிலில் வழிபாடு நடத்துவது வழக்கம். நேற்று மாலையும் பூஜையை முடித்து விட்டு பூசாரி கோவிலை பூட்டிச் சென்றார்.

இன்று காலை அப்பகுதியினர் பார்த்த போது, அங்குள்ள மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். அருகில் சென்று பார்த்த போது காணிக்கை பணம் சிதறி கிடந்துள்ளது. மேலும் வேல் ஓன்றும் கீழே கிடந்தது. எனவே யாரோ மர்ம நபர்கள் உண்டியலை, வேல் மூலம் நெம்பி உடைத்திருக்கலாம் என தெரிகிறது.

இதுகுறித்த தகவல் கிடைத்த தும் கோவில் தலைவர் தர்மலிங்கம், செயலாளர் கண்ணன் ஆகிேயார் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story