பட்ட பகலில் நடந்த கொள்ளை சம்பவம்

பட்ட பகலில் நடந்த கொள்ளை சம்பவம்

கொள்ளை

திண்டுக்கல் மாவட்டம், சிறுகுடி பகுதியில் பட்டபகலில் வீடுபுகுந்து மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சிறுகுடி மேற்கு தெரு பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வீட்டில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 10 நகை கொள்ளை, மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து வீடு புகுந்து திருட்டு மற்றும் கொள்ளைகள் நடந்து வருகின்றன. பஸ் ஸ்டாண்ட் ,தியேட்டர், ரயில்வே ஸ்டேஷன் உட்பட முக்கிய இடங்களின் நிறுத்தப்படும் வாகனங்களும் திருடப்படுகின்றன. ரோட்டில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் நடக்கின்றன ‌ தொடர்ந்து கொள்ளை திருட்டு வழிப்பறி நடப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். போலீசார் தொடர்ந்து ரோந்து பணியை செய்த போதும் இவற்றை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

Tags

Next Story