வாணியம்பாடியில் பெண் வைத்திருந்த 3 சவரன் தங்கநகை கொள்ளை
காவல் நிலையம்
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பெண் பயணி பையில் வைத்திருந்த 3 சவரன் தங்கநகையை கொள்ளையடித்து 2 பெண்கள் தப்பியோடிய பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சேலம் பகுதியை சேர்ந்த அசோகன் ஓய்வு பெற்ற வனத்துறை ஊழியரான இவர், தனது மனைவி லோகம்மாளுடன், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியப்பேட்டை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சயிற்கு பேருந்தில் வந்துகொண்டிருந்த போது,
இவர்களை நோட்டமிட்ட 2 பெண்கள், பேருந்து வாணியம்பாடி நகராட்சி பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த போது லோகம்மாள் பையில் வைத்திருந்த 3 சவரன் தங்க நெக்ல்ஸை பறித்துக்கொண்டு 2 பெண்கள் தப்பியோடியுள்ளனர், பின்னர் இதுகுறித்து அசோகன், லோகம்மாள் இருவரும் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் தங்க நகை பறிப்பு குறித்து புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தங்க நகையை பறித்துச்சென்ற 2 பெண்களை தேடி வருகின்றனர்...
Tags
Next Story