ஐடி ஊழியரிடம் வழிப்பறி - 4 பேர் கைது

ஐடி ஊழியரிடம் வழிப்பறி - 4 பேர் கைது

கைதானவர்கள் 

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஐடி ஊழியரை வழிமறித்து தாக்கி வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், வடுகப்பட்டி அருகே காஞ்சாம்புதூரைச் சேர்ந்தவர் சங்கர் (32). இவர் பெங்களூரில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். அவர் வார விடுமுறையை முடித்து விட்டு மீண்டும் பணிக்கு பெங்களூர் செல்வதற்காக ஞாயிறு இரவு தனது இரு சக்கர வாகனத்தில் காஞ்சாம்புதுாரில் இருந்து வைகுந்தம் செல்லும் சாலையில் ஏவிஆர் தோட்டம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் வழிமறித்து பணத்தை எடுத்துக் கொடு என மிரட்டல் விடுத்து கையால் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், பணம் ரூ. 850, கம்பெனி ஐடி கார்டு, டெபிட் கார்டுகளையும் பறித்துக் கொண்டு, சங்கரின் இருசக்கர வாகனத்தையும் எடுத்துச் சென்று விட்டனர். இது குறித்து சங்கர் சங்ககிரி காவல் நிலையத்தில்அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து வைகுந்தம் பகுதியில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, வைகுந்தம் ஏரி பகுதியில் அமர்ந்து இருந்த 4பேரை பிடித்து விசாரித்ததில் சங்கரிடம் பணம், செல்போன், டூவீலர் பறித்தை ஒப்புக்கொண்டனர். விசாரணையில், சங்ககிரி அருகே இருகாலுார் அருள்குமார்(23), அதே பகுதியைச் சேர்ந்த பிரவின்(19), ஜீவா(29), மோகன்ராஜ்(24) என்பது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவரிகளிடமிருந்து பணம் செல்போன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story