தனியாக இருந்த மூதாட்டியிடம் பணம், நகை கொள்ளை

திருப்பூர், பெருமாநல்லூர் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி மர்ம நபர்கள் பணம், நகை கொள்ளையடித்து சென்றனர்.

திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை கொள்ளை. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் தட்டாங்குட்டை அத்திக்காடு பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் கண்ணன். இவர் திருப்பூரில் உள்ள டைல்ஸ் கிரானைட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கமாக வேலை முடிந்து இரவு தாமதமாக வருவது பழக்கம்.பள்ளி விடுமுறை ஆகையால் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கண்ணனுடைய மனைவி தாய் வீட்டுக்கு சென்று விட்டார். ஆகையால் வீட்டில் யாரும் இல்லாமல் கண்ணனுடைய தாயார் அம்சவேணி(65) தனியாக இருந்து வந்துள்ளார்.சம்பவ தினமான நேற்று இரவு தலைக்கவசம் அணிந்த மூன்று மர்ம நபர்கள் சுமார் ஒன்பது முப்பது மணி அளவில் திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். நுழைந்த உடன் கத்தியை காட்டி மிரட்டி அம்சவேணியை கட்டலில் சும்மா படு என சொல்லிவிட்டனர். பின்னர் அம்சவேணியின் கழுத்தில் கத்தியை வைத்து பீரோ சாவி கேட்டு மிரட்டிள்ளனர். உயிருக்கு பயந்த அம்சவேணி பீரோ சாவி இருக்கும் இடத்தை கூறிவிட்டார்.

மேலும் தலையணைக்கு அடியில் வைத்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டனர்.கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் சுமார் 50,000 மற்றும் சுமார் பத்து பவுன் நகைகளை கொள்ளை அடித்து முடித்த பின்பு இன்னும் என்னெல்லாம் இருக்கிறது எனக் கேட்டுள்ளனர். வேறொன்றும் இல்லையப்பா எனக் கூறியுள்ளார் அம்சவேணி.ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வெளியில் கிடந்த கடப்பாரை மம்மட்டி போன்ற வேலை கொண்டு வந்து பீரோவை உடைத்து நாசம் செய்து உள்ளனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் சாவியை எங்கோ விழுந்து விட்டதால் அதைத் தேடிப் பார்த்தனர். கிடைக்காத ஆத்திரத்தில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள் அனைத்து துணிமணிகள் அத்தனையும் கலைத்து தேடிப் பார்த்தனர். இந்த நிலையில் இரவு வேலைக்கு சென்று கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்த கண்ணன் வீட்டு அருகில் யாரோ இருப்பதைப் போன்று உண்ணந்துள்ளார். உடனே வேகமாக வந்த அவரைப் பார்த்த கொள்ளையர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு ஓடி விட்டனர். வீடு இருந்த நிலையும் தாய் சொன்ன வார்த்தைகளையும் கேட்டுக் கொண்ட கண்ணன் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருட்டுப் போன ரொக்கம் தங்கம் வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 7 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story