பெரம்பலூரில் பெண்ணிடம் வழிப்பறி: வாலிபர் கைது

பெரம்பலூரில் பெண்ணிடம் வழிப்பறி: வாலிபர் கைது

கைது செய்யப்பட்ட நபர்

பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் பெண்ணிடம் வழிப்பறி செய்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் மங்கூன் கிராம பகுதியில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவ்வழியாக வந்த அடையாளம்தெரியாத நபர் கத்தியை காட்டி மிரட்டி அப்பெண் அணிந்திருந்த தங்க செயினை பறித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பாடாலூர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திர ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படியும் பாடாலூர் காவல் ஆய்வாளர் பொறுப்பில் உள்ள சுப்புலெட்சுமி மற்றும் பெரம்பலூர் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர்களின் தலைமையில்,

தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளி விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் கொண்டு பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் விசாரணை நடத்தியதில், குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் கல்பாளையம் மாதா கோவில் தெருவை சேர்ந்த ரெங்கராஜ் என்பவர், மகன் சந்தோஷ்குமார் 26, மற்றும் திருச்சி . திருவாணைக்காவல் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் அர்ஜூன் ஆகியோர் என்பது தெரிய வந்தது, இதில் தனிப்படையினர் விரைந்து குற்றவாளி சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கிலும் தொடர்புடையவர் என்பதும்,

மேலும் இவர் மீது திருச்சி மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடந்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து வழக்கில் காணாமல் போன *1 பவுன் தங்க செயின் 01, வெள்ளி செயின் 01, கவரிங் செயின் 01 ஆகியவற்றையும் பெரம்பலூரில் கடந் 2023ம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி -ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பறித்த 7 பவுன் தங்க செயின் மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வீச்சருவாள் உள்ளிட்ட ஆயுதங்களை . பறிமுதல் செய்த காவல்துறையினர் எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி வெகுவாக பாராட்டினார்கள்.

Tags

Next Story