நாகர்கோவிலில் அருகே கோவில், 2 வீடுகளில் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதிசாரம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சென்னையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் அவருடைய தாயார் இறந்து விட்டதால் அதன் பிறகு ஊரில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு தந்தையைகொண்டு சென்னைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டுக்காரர் மூலம் வீட்டில் மின்விளக்கு எரிவதாக தகவல் கிடைத்துள்ளது.
உடனடியாக பாலாஜி தனது தந்தையை அழைத்துக் கொண்டு நேற்று ஊருக்கு வந்துள்ளார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 3 பவுன் சங்கிலி, ரூபாய் ஒன்றரை லட்சமும் மாயமாகிறது. வீட்டின் பின் வாசல் கதவு வழியாக கொள்ளையர்கள் உள்ளே புகுந்து திருடியது தெரியவந்தது.
இதேபோல அதே தெருவை சேர்ந்த மல்லிகா (65) என்பவரும் வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய வீட்டில் இருந்தும் 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை மர்ம நாடகங்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. அதே இரவில் திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலிலும் உள்ளே புகுந்து உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
மேலும் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்து, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் தூக்கி சென்று தெரிய வந்தது. இந்த மூன்று சம்பவங்களும் ஒரே நாளில் நடந்து உள்ளது. இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.