ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி !
பொருட்காட்சி
கள்ளக்குறிச்சி ஏ.எம்.சி., மருத்துவமனை எதிரே ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்காட்சி நடக்கிறது. இதுகுறித்து பொருட்காட்சி உரிமையாளர் சிட்டிபாபு கூறியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது. இங்கு ரோபோடிக் பறவைகள், மிருகங்கள் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் வண்ண விளக்குகளால் மிருகங்களின் சத்தத்துடன் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விதமான பறவைகளுடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வகையில் 'செல்பி' பாயிண்ட்டும் உள்ளது. ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு விளையாட்டு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், பர்னிச்சர், பேன்சி பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் நீச்சல் குளம், தொங்கும் பாலம், 3டி ஷோ, வாட்டர் போர்ட், குழந்தைகள், பெரியவர்கள் வரை மகிழும் வகையிலான ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது. கண்காட்சிக்கு வருவோர் சுவைத்து மகிழும் பொருட்டு டெல்லி அப்பளம், வாழைத்தண்டு சூப், ஐஸ்கிரீம், ஜிகர்தண்டா போன்ற சுவையான தின்பண்ட கடைகளும் உள்ளன. பொருட்காட்சி நாள்தோறும் மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் 50 ரூபாய் ஆகும். இவ்வாறு சிட்டிபாபு கூறினார்.