பூதப்பாண்டியில் பாறைகள் உடைக்கும் வெடிபொருட்கள் பறிமுதல்

பூதப்பாண்டியில் பாறைகள் உடைக்கும் வெடிபொருட்கள் பறிமுதல்

பூதப்பாண்டியில் பாறைகள் உடைக்கும் வெடிபொருட்கள் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் , ஞானதாசபுரம் பகுதியில் சட்டவிரோதமாக வெடி வைத்து பாறைகளை உடைப்பதற்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் , பூதப்பாண்டியில் உள்ள ஞானதாசபுரம் பகுதியில் அரசு சொந்தமான இடத்தில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சட்ட விரோதமாக வெடி வைத்து பாறைகளை உடைப்பதாகவும், மண் எடுக்கப்படுவதாகவும் தோவாளை தாலுகா தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் போலீசார் உடன் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது அனுமதி இன்றி மண்ணெடுப்பதும் பாறைகளை வெட்டி எடுப்பதும் தெரிய வந்தது. அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் கிருஷ்ணா (42) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து செய்தனர். இந்த நிலையில் நேற்று மாலையில் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து, தோவாளை தாசில்தார் மற்றும் பூதப்பாண்டி போலீசார் முன்னிலையில் பாறைகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 55 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 40 மீட்டர் மின்சார ஒயர்கள், 22 டெட்டனேட்டர்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. கண்டெடுக்கப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

Tags

Next Story