திடீரென ரெயில் பெட்டி மீது விழுந்த பாறை கற்கள்

ரயில் வந்தபோது திடீரென ரெயில் பெட்டி மீது பாறை கற்கள் விழுந்தன. இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோட்டில் அமைக்கப்பட்ட ரயில் பாதை மலைகளை குடைந்து உருவாக்கப்பட்டது. அதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில் இந்த இடத்தில் மெதுவாக தான் செல்லும். அந்த ஸ்டேஷனில் ரயில் நின்றாலும் இல்லாவிட்டாலும் மெதுவாக செல்ல ரயில் ஓட்டுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும். அந்த வகையில் கேரளா திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 6:15க்கு திண்டுக்கல்லை அடுத்த கொடைரோடு-அம்பாத்துறை வழித்தடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ரெயில் பெட்டி மீது பாறை கற்கள் விழுந்தன.இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்து பார்த்துக் கொண்டிருந்த கரூர் வினோத்திற்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

Tags

Next Story