தலைவாசல் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

தலைவாசல் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

 தலைவாசல் 

தலைவாசல் மருத்துவக் கல்லூரியில்ராக்கிங் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தலைவாசலில் செயல்படும் சேலம் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையவளாகத்தில் ராக்கிங் விழிப்புணர்வு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் இளங்கோ தலைமை வகித்துபேசுகையில், 'இந்த கல்லூரியில்தற்போது 239 மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். முதலாமாண்டில் தற்போது 80 பேர் சேர்க்கப் பட்டுள்ளனர் அனைத்து நவீன வசதிகளுடன் சிறப்பான பேராசிரியர்களை கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கால்நடை மருத்துவம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதனை முழுமையாக பயன்படுத்தி, நல்ல விதத்தில் கல்வி என்று தங்களது வாழ்வில் முன்னேற்றடைய வேண்டும். புதிய மாணவர்களை, சீனியர் மாணவர்கள் சகோதரர்கள் போல பழகி வருவதை பார்க்கும்போது, கல்லூரியில் ராக்கிங் என்ற பேச்சுக்கே வாய்ப்பில்லை." என்றார்.

Tags

Next Story