மலை உச்சியில் நிலச்சரிவு ஏற்பட்டு வெடித்து சிதறிய பாறைகள்

மலை உச்சியில் நிலச்சரிவு ஏற்பட்டு வெடித்து சிதறிய பாறைகள்

வெடித்து சிதறிய பாறைகள்

கிளாமலையில் வனத்துறை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் வெடித்து சிதறிய பாறைகள்.
கோடை வெயிலின் தாக்கம் குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தொடர் மழைக்கு பின் மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள வெப்ப நிலை மாற் றம் மக்களை பாடாய் படுத்துகிறது. மாவட் டத்தின் சில பகுதிகளில் கோடை மழை லேசாக பெய்தாலும் தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மலை பகுதிகளில் கடும் வெயி லின் தாக்கம் காரணமாக கடும் தண்ணீர் பஞ்சமும் ஏற்பட்டு உள்ளது.இந்நிலையில் பத்துகாணி அருகே கிளாமலை பகுதியில் மலையின் ஒரு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு டீரென வெடித்து சிதறியது. இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அந்தப் பகுதியில் மலை அடிவாரத்தில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர் இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story