தோவாளை மலர் வணிக வளாகத்தில் ரூ.2.12 கோடியில் மேற்கூரை 

தோவாளை மலர் வணிக வளாகத்தில் ரூ.2.12 கோடியில் மேற்கூரை 
தோவாளை மலர் சந்தை பணி அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் வணிக வளாகத்தில் ரூ.2.12 கோடியில் மேற்கூரை  அமைக்கும் பணியை அமைச்சர்  துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியம், தோவாளை மலர் வணிக வளாகத்தில் மேற்கூரை அமைக்கும் பணி துவக்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்து தெரிவிக்கையில்,

தோவாளையில் அமைந்துள்ள பழமையான தேசிய மலர்சந்தை தென்திருவிதாங்கூர் சமஸ்தானம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து நாளது வரை நடைபெற்றுவருகிறது.

தோவாளை மலர் வணிக வளாகத்தில் மேற்கூரை அமைத்து தர வேண்டுமென விவசாயிகள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர்கள் கோரிக்கை வைத்தனர். அக்கோரிக்கையினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கன்னியாகுமரி விற்பனை குழு சார்பில், ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் தோவாளை மலர் வணிக வளாகத்தில் உயர்மட்ட கூரை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வணிகம்) சுந்தர் டேனியல் பாலஸ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு, வேளாண்மைத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story