பழனியில் ரோப் கார் வசதி இன்று ரத்து
பழனியில் ரோப் கார் வசதி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
பழனி கோயில் ரோப் கார் இன்று பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைக் கோயிலை அடைவதற்கு ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை பக்தர்கள் ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் முதியவர்கள் இதில் செல்வதற்கு அதிக விருப்பமாக உள்ளனர். இந்நிலையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் ரோப்கார் இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் பக்தர்கள் வின்ச் மற்றும் படிப்பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Tags
Next Story