சின்னமனூர் அருகே அழுகிய நிலையில் சடலம்

X
அழுகிய நிலையில் சடலம்
தேனி மாவட்டம்,முல்லைபெரியாற்றில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னமனூர் மார்க்கையன்கோட்டை இடையிலான முல்லைப் பெரியாற்றின் நேற்று சடலம் ஒன்று கிடப்பதாக சின்னமனூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்ட நிலையில் அது ஆணா பெண்ணா என கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு உருகுளைந்து காணப்பட்டது. சடலத்தை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags
Next Story
