நாமக்கல்லில் ரோட்டரி சங்கம் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு !

ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் எவர்கிரீன் சிட்டி மற்றும் சன் மில்க் பால் பண்ணை, சரவணா கிச்சன் ஆகியவை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் நாமக்கல் நகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு தரப்பினர் நீர் போர் பந்தல் அமைத்து வருகின்றனர். இந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் எவர்கிரீன் சிட்டி மற்றும் சன் மில்க் பால் பண்ணை, சரவணா கிச்சன் ஆகியவை சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

ரோட்டரி கிளப் ஆஃப் நாமக்கல் எவர்கிரீன் சிட்டி தலைவர் இளஞ்செழியன் தலைமையில் நீர் மோர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பொது மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி உள்ளிட்ட பழங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கே.சுப்பிரமணியம், கே.முத்துசாமி, திட்ட இயக்குனர் அருண் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நீர் மோர் பந்தல் இந்த மே மாதம் முழுவதும் இருக்கும் என ரோட்டரி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story