அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சையால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடை நேரத்தில் அழுகும் பன்னீர் திராட்சையால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செட்டியபட்டி, ஏ.வெள்ளோடு, கலிக்கம்பட்டி, கல்லுப்பட்டி, வேளாங்கண்ணி நகர், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொடிகளில் பன்னீர் திராட்சை அறுவடை செய்யும் பருவத்தில் இருந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், திராட்சை பழங்கள் செடியிலேயே வெடித்து அழுகி கீழே விழுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால் வேதனை அடைந்துள்ளனர். அனைத்து பழங்களும் அழுகி வீணாவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.
Next Story