ரவுடிகள் வீட்டில் போலீசார் சோதனை
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், காவல்துறை இயக்குனர் சங்கர்ஜிவால் அறிவுறுத்தலின் படியும், நாமக்கல் எஸ்.பி.,ராஜேஸ்கண்ணன் ஆலோசனையின்படியும் திருச்செங்கோடு சரகத்திற்குட்பட்ட மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்றுமுன்தினம் பழைய சரித்திர பதிவேடு கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்ட இல்லங்களில் எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் வீடுகளில் ஆயுதங்கள் ஏதாவது பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், மல்லசமுத்திரம் போலீஸ்ஸ்டேசனுக்குட்பட்ட பகுதிகளான ராமாபுரம், அப்பியாபட்டி, செம்பாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சரித்திர பதிவேட்டில் சந்தேகபட்டியலில் இடம்பெற்றுள்ள குற்றவாளிகள் 11பேர், ரவுடிபட்டியலில் 9பேர், கேடிபட்டியலில் ஒருநபர் என அவர்களது வீடுகளில் துப்பாக்கி, கத்தி, கொலை மற்றும் கொள்ளைக்கான ஆயுதங்கள் ஏதாவது உள்ளதா என எஸ்.ஐ.க்கள் ரஞ்சித்குமார், முருகேசன், கனகராஜ், அய்யாவு, தலைமை காவலர் கனகராஜ் தலைமையிலான போலீசார் ஆய்வுமேற்கொண்டதில் இதுபோன்ற ஆயுதங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை. அதேபோல், எலச்சிபாளையம் போலீஸ்ஸ்டேசனுக்குட்பட்ட கொன்னையார், கருங்கல்பட்டி, வையப்பமலை உள்ளிட்ட பகுதிகளில் ரவுடிகள் 10பேர், சந்தேகநபர்கள் 5பேர் வீடுகளில் எஸ்.ஐ., பொன்குமார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டதில் எந்தவொரு ஆயுதமும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.