வாலிபர் கொலைவழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை 

வாலிபர் கொலைவழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை 
மணிகண்டன்
நாகர்கோவில் அருகே வாலிபர் கொலைவழக்கில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை சிடிஎம் புரத்தைச் சேர்ந்தவர் மைதீன் அப்துல்காதர் (40). இவர் பறக்கையில் புரோட்டா கடை நடத்தி வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவரது கடையில் பறக்கை செட்டிதெருவைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்பவர் தனது ஊறவினரின் நினைவு ஆஞ்சலி தொடர்பான சுவரொட்டி ஓட்டியுள்ளார். இதில் மைதீனுக்கும், மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆதே இண்டு ஜூன் மாதம் கடையில் இருந்த மைதீன்ஆப்துல்காதரை மணிகண்டன் மற்றும் 5 பேர் சேர்ந்து பைக்கில் வெளியே ஆழைத்துச் சென்றனர். மறுநாள் காலை மைதீன் பிலாவிளை பகுதியில் ஊள்ள ஓரு தென்னந்தோப்பில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.இது குறித்த புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸார் வழக்கு பதிந்து மணிகண்டன் மற்றும் 5 பேரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு நாகர்கோவில் மாவட்ட கூடுதல் ஆமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ஜாய், மணிகண்டன் மீதான கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ 10 ஆயிரம் ஆபராதமும், ஆபராதத்தை கட்ட தவறினால் மேலும் இரு ஆண்டு சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். சிறைதண்டனை விதிக்கப்பட்ட மணிகண்டன் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளது. மேலும் அவர் மீது மீது கோட்டாறு காவல்நிலையத்தில் நடைபெற்ற ஓரு பெண் கொலை வழக்கு உட்பட பல வழக்குகளில் தொடர்பு உள்ளது.

Tags

Next Story