காவலர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
fileimage
ராஜாக்கமங்கலம் அருகே விளாத்திவிளையை சேர்ந்தவர் கண்ணன் என்ற ஜிம் கண்ணன். இவர் மீது ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் ஜெகநாதன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளது. ரவுடிகள் பட்டியலிலும் கண்ணன் பெயர் இடம் பெற்றுள்ளது. ஜெகநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கண்ணன் ஜாமீனில் விடுதலை ஆனார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
போலீசார் அவரை தேடி வந்தனர். இதேபோல் பழவூர் பகுதியில் நடந்த கொலை வழக்கு ஒன்றிலும் கைது செய்யப்பட்ட கண்ணன் தலைமறைவாக இருந்து வந்தார். பழவூர் போலீசார் கண்ணனை தேடி வந்தனர். இந்த நிலையில் பழவூர் போலீசார் கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை பழவூர் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கண்ணனை பாளையங்கோட்டை ஜெயில் அடைத்தனர்.