ராசிபுரம் ஸ்ரீ பால முருகனுக்கு ராஜ அலங்காரம்
ராஜ அலங்காரத்தில் ஸ்ரீபாலமுருகனுக்கு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் சுவாமிக்கு கந்த சஷ்டியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
முன்னதாக முருகனுக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் முத்துக்கள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து ஸ்ரீ பால முருகனுக்கு மகா தீபாரணை நடைபெற்று பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Tags
Next Story