முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ1. 05 லட்சம் அபராதம்

முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ1. 05 லட்சம் அபராதம்

கூடலூரில் உள்ள நெடும்பரம்பு மலையில் அத்துமீறி முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ1. 05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 

கூடலூரில் உள்ள நெடும்பரம்பு மலையில் அத்துமீறி முயல் வேட்டையில் ஈடுபட்ட 7 பேருக்கு ரூ1. 05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் சிவகிரி வனச்கரக எல்லைக்குட்பட்ட கூடலூரில் உள்ள நெடும்பரம்பு மலையில் மான், பன்றி, முயல் வேட்டையாடப்படுகின்றன என திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் உயிரினக் காப்பாளர் டாக்டர் முருகன் ரகசிய தகவலின் பேரில், ரேஞ்சர் மௌனிகா, தலைமையில் சிவகிரி வடக்கு பிரிவு வனவர் அசோக்குமார், மற்றும் வனக்காப்பாளர்கள் முகமது அலி, பாரதி கண்ணன், அருண் மொழி பிரதீப், மாதவி பானு, வனகாவலர் கள் ஆனந்தன், மாரியப்பன், வேட்டை த்தடுப்பு காவலர்கள் பாலசுப்பிரமணியன், சரவணன், யோகநாதன், ஆகியோர் தனிக்குழுவாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முயல் வேட்டையில் ஈடுபட்ட சங்கரன்கோவில் தாலுகா பெரும் பத்தூர் இந்திரா காலனியைச் சேர்ந்த அருண் (20), ராஜா (32), சத்ரு (18), கனிராஜ் (23), சுந்தர ராஜன் (45), சிவகிரி தாலுகா துரைச் சாமியபுரம் கனக்குமார் (21), ராகுல் (22) ஆகிய ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். வேட்டையாட முயன்ற குற்றம் கண்டு பிடிக்கப்பட்டு குற்றம் உறுதி செய்யப்பட்டது. சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வைத்து வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக் காப்பாளர் டாக்டர் முருகன் உத்தரவின் பேரில் நபர் 1-க்கு ரூ.15 ஆயிரம் வீதம், 7 நபர்களுக்கு ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags

Next Story