போதை பொருட்கள் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஆணையாளர் சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் செயல்படும் பெட்டிக்கடைகள் உணவகங்கள் பேக்கரிகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் காலாவதியான உணவுப் பொருட்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து நகராட்சி ஆணையர் இரா.சேகர் தலைமையில் சுகாதார அலுவலர் வெங்கடாசலம், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் கொண்ட குழு ஆய்வு செய்தனர் ஆய்வில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் காலாவதியான உணவுகள் புகையிலை பொருட்கள் வைத்திருந்த இரண்டு பேக்கரிகள் சீல் வைக்கப்பட்டு தலா ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டது மேலும் நகரில் உள்ள 30 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டு ரூபாய் 28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது .புகையிலைப் பொருட்கள் மற்றும் பான்பராக், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தால் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையர் சேகர் எச்சரித்துள்ளார்

Tags

Next Story