ரூ. 110 கோடி மதிப்பிலான புதிய மருத்துவமனை கட்டிடம்

திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ. 110 கோடி மதிப்பீட்டிலான கட்டிடத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி புதுக்கோட்டை பெரம்பலூர் அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன ஸ்கேன் எம் ஆர் ஏ கருவிகள் இருப்பதால் அதிக அளவில் நோயாளில் வந்து செல்வதால் புதிய மருத்துவமனை கட்டுவதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று காலை ரூபாய் 110கோடி மதிப்பீட்டிலான கட்டப்பட உள்ள உயர் மருத்துவ சிகிச்சைக்கான கட்டிடத்திற்கு தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து ரூபாய் 99லட்சம் மதிப்பிலான நோயாளிகள் உதவியாளர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மருத்துவமனை டீன் மருத்துவர் நேரு, மருத்துவமனை கண்ணாணிப்பாளர் அருண், மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story