ரூ. 11.47 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ரூ. 11.47 லட்சத்துக்கு ஏலம் போனது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தமிழ்நாடு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கடந்த இரண்டு நாட்களாக 39விவசாயிகள் 336மூட்டைகளில் 148.14குவிண்டால் அளவிற்கு விவசாயிகள் தேங்காய் பருப்புகளை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். அப்படி கொண்டு வந்த தேங்காய் பருப்புகள் ஏலம் விடப்பட்டது.

இதில் மொத்தம் 11லட்சத்து 47 ஆயிரத்து 717ரூபாய் 15காசுகளுக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்ச விலையாக 86ரூபாய் 10காசுக்கும், குறைந்தபட்ச விலையாக 65ரூபாய் 65காசுக்கும் சராசரி விலையாக 83ரூபாய் 49 காசுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது எனவும், அப்படி நிர்ணயம் செய்யப்பட்ட தேங்காய் பருப்புகளை 6வியாபாரிகள் வாங்கி சென்றதாக வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தகவல் தெரிவித்தார்.

Tags

Next Story