தென்மாவட்ட மக்களுக்கு இதுவரை ரூ.1.23 கோடி மதிப்பு நிவாரண பொருட்கள்

தென்மாவட்ட  மக்களுக்கு இதுவரை  ரூ.1.23 கோடி மதிப்பு நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்களை அனுப்பி வைப்பு 

கனமழையினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட பொதுமக்களுக்கு இதுவரை ரூ.1 கோடியே 23 லட்ச மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் கடந்த 18.12.2023 முதல் பிஸ்கட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு, டீ தூள் பாக்கெட்கள், அரிசி, எண்ணெய், கோதுமை மாவு, பிரட் பாக்கெட்கள், சோப்புகள், போர்வைகள் மற்றும் துணி வகைகள் என பல்வேறு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,43,000 மதிப்பீட்டில் பிஸ்கட், அரிசி, எண்ணெய், இதர மளிகை பொருட்கள் உட்பட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் இன்று வரை சுமார் 15 வாகனங்கள் மூலமாக ரூ.1 கோடியே 23 லட்சத்து 64 ஆயிரத்து 216 ரூபாய் மதிப்பீட்டிலான நிவாரண பொருட்கள் பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story