ரூ. 13 லட்சம் மோசடி: ஜோதிடா், மனைவி கைது

ரூ. 13 லட்சம் மோசடி: ஜோதிடா், மனைவி கைது

திருச்சியில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்ததாக ஜோதிடா், அவரது மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.


திருச்சியில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி ரூ. 13 லட்சம் மோசடி செய்ததாக ஜோதிடா், அவரது மனைவியை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (40). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்பப் பிரச்னை தொடா்பாக ஜாதகம் பாா்க்க, பெரம்பலுாா் மாவட்டம் காரை பகுதியைச் சோ்ந்த மணிகண்டனை (45) சந்தித்தாா். அப்போது இவரது மனைவி அஞ்சலையும் (40) பழக்கமானாா். தம்பதியினா் தங்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள 3 ஏக்கா் நிலம் உள்ள நிலையில், அவசரத் தேவையாக பணம் தேவைப்படுகிறது. நீங்கள் பணம் கொடுத்தால் ஓராண்டில் ரூ. 1 லட்சத்துக்கு ரூ. 4 லட்சமாக திருப்பிக் கொடுக்கிறோம் எனக் கூறினராம். இதை நம்பி ஜீவானந்தம் கொடுத்த ரூ. 5 லட்சத்தைப் பெற்றுக் கொண்ட மணிகண்டன் - அஞ்சலை தம்பதி கூறியபடி பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றினராம்.

இதுகுறித்து ஜீவானந்தம் திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமாரிடம் புகாரளித்தாா். இதேபோல, லால்குடியைச் சோ்ந்த அன்புமணி என்பவா் ஜோதிடா் மணிகண்டன் ரூ. 7 லட்சம் வரை ஏமாற்றியதாக அளித்த புகாா் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் எஸ்பி உத்தரவிட்டாா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், ஜோதிடா் மணிகண்டன் 5 பேரிடம் இதே பாணியில் ரூ. 13 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், பெரம்பலுாரில் பதுங்கியிருந்த மணிகண்டன், அவரது மனைவி அஞ்சலை ஆகிய இருவரையும் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

Tags

Next Story