நாமக்கல்லில் 82 வாகனங்களில் ரூ.1.35 லட்சம் வரி வசூல்: ஆா்.டி.ஓ அதிரடி

நாமக்கல்லில் 82 வாகனங்களில் ரூ.1.35 லட்சம் வரி வசூல்: ஆா்.டி.ஓ அதிரடி

நாமக்கல்லில் 82 வாகனங்களில் ரூ.1.35 லட்சம் வரி வசூல்: வட்டார போக்குவரத்து துறை அதிரடி

நாமக்கல்லில் 82 வாகனங்களில் ரூ.1.35 லட்சம் வரி வசூல்: வட்டார போக்குவரத்து துறை அதிரடி

நாமக்கல்லில், வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய திடீர் தணிக்கையின்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களில் ரூ. 1.35 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது. சென்னை போக்குவரத்து கமிஷனர் உத்தரவின்படியும், நாமக்கல் கலெக்டர் உமா அறிவுறுத்தலின் பேரிலும், நாமக்கல் நகரின் பல்வேறு பகுதியில், கடந்த, 2 நாட்களாக திடீர் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், சரவணன், நித்யா ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

மொத்தம், 266 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 82 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. அதில் ரூ. 44 ஆயிரம் இணக்கக் கட்டணம் வசூல் செய்யப்பட்டது. மேலும், ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 400 இணக்கக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் ரூ. 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 452 வரி வசூல் செய்யப்பட்டது. உரிய வரி செலுத்தாலும், இன்சூரன்ஸ் சான்று பெறாமலும், எப்.சி சான்று இன்றியும், விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஹெல்மெட் அணியாமல் இயக்கிய குற்றத்திற்காக டூ வீலர்களை ஓட்டிவந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி டூ வீலர்களை ஓட்டி வந்த 10 பேரின் லைசென்ஸ்கள் தற்காலிகமாக தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

Tags

Next Story