தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம்

ஜெயபாலன் 

நாமக்கல்லில் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அறிவித்துள்ளார்.

நாமக்கல் ராசிபுரத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜெயபாலன் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி முடித்து வரும்போது ஜெயபாலன் (50) சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இவர், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள வெண்ணந்தூர் அரசுப் பள்ளியில் தாவரவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.கடந்த வாரம் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி தேர்தல் பயிற்சி பணிக்காகச் சென்று விட்டு, மாலை 4 மணிக்கு மேல் ஜெயபால் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். தொடர்ந்து, வேட்டாம்பாடி என்னும் இடம் அருகே வந்து கொண்டிருந்த போது, ஜெயபால் முன்னே சென்ற அரசுப் பேருந்தை முந்த முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலையிலிருந்த பள்ளத்தில் வாகனம் சிக்கியதால், தடுமாறிய ஜெயபால் பேருந்தின் சக்கரத்தில் சிக்கியுள்ளார். அப்போது பேருந்தின் டயர் ஜெயபால் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

Tags

Next Story