விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் - அண்ணாமலை வாக்குறுதி
செங்கல்பட்டு மாவட்டம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை 104 -வது நாள் பாதயாத்திரை மதுராந்தகம் மற்றும் செய்யூர் தொகுதி மக்களை சந்திக்கும் வகையில் இரண்டு தொகுதியும் சந்திக்கும் சித்தாமூர் கூட்டுச்சாலையில் நடைப்பயணம் மேற்கொண்டு சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் வேண்டாம் தமிழகத்தின் வளர்ச்சி எதுவும் செய்யவில்லை,திமுக தேர்தல் வாக்கு உறுதியில் ஐந்து ஆண்டுகளுக்குள் 3.5 பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் தெரிவித்தார்.ஆண்டுக்கு 70 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கிருக்க வேண்டும் மூன்று ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அரசு வேலை வழங்கியுள்ளார்கள்.. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசு வேலை இதுவரை இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க படும் பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே மதுபானங்கள் கடைகள் மூடப்பட்டும் மதுபான கடைகள் மூடப்பட்டு கல்லு கடைகள் கொண்டு வரப்படும்.
இதனால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் மாவட்டந்தோறும் ஏழை எளிய குழந்தைகள் தனியார் பள்ளியில் கிடைக்கும் கல்வி போன்று கிடைக்கும் நவோதயா பள்ளிகள் மாவட்டந்தோறும் இரண்டு பள்ளிகள் திறக்கப்படும். விவசாயிகளுக்கு மாதந்தோறும் மத்திய அரசு ஆறாயிரம் ரூபாய் வழங்கி வருகிறது பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசு நிதி 6000 மாநில அரசு நிதி 9000 ஆயிரம் ரூபாய் சேர்த்து 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.திமுக அளித்த வாக்குறுதியில் 20%கூட நிறைவேற்ற வில்லை மத்திய அரசு 295 வாக்குறுதிகள் நிறை வேற்றபட்டுள்ளது எனப் பேசினார்.இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.