போலி நகைகள் அடமானம் வைத்து ரூ.16.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

போலி நகைகள் அடமானம் வைத்து ரூ.16.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது

 கைது

போலி நகைகள் அடமானம் வைத்து ரூ.16.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது.
தஞ்சாவூர், தெற்கு வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில், கடந்த பிப்ரவரி மாதம் அடமானத்துக்கு வந்த நகைகளை மதிப்பீட்டாளர் சோதனை செய்தார். அப்போது, 25.32 பவுன் நகைகள் போலி என்பதும், அதை வைத்து சிலர் 9.71 லட்சம் கடன் பெற்றதும் தெரிய வந்தது. இது குறித்து கிளை மேனேஜர் ராஜாராம், மேற்கு போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில், தஞ்சாவூர், அண்ணா காலனியை சேர்ந்த பிரபாகரன்,51, மன்னார்குடி அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ்,51, திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியைச் சேர்ந்த ஜெயபால்,73, உள்பட நான்கு பேர் மோசடி செய்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து, பிரபாகரன், ரமேஷ், ஜெயபாலை போலீசார் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர். மேலும், தெற்கு வீதியிலுள்ள மற்றொரு தனியார் நிறுவனத்தில், பிரபாகரன் 18 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்து 6.86 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக கிளை மேனேஜர் சுதர்சன் அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் பிரபாகரன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story