ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுமானம். எம்.எல்.ஏ துவக்கி வைப்பு

ரூ. 17 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுமானம். எம்.எல்.ஏ  துவக்கி வைப்பு
கட்டுமான பணியை துவக்கிய எம்.எல். ஏ 
குமரி மாவட்டம் , குளப்புறம் ஊராட்சி பகுதி மக்கள் அங்குள்ள உதயனூர் விளை என்ற பகுதியில் புதிய முழு நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் எம்.எல்.ஏ -விடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி புதிதாக ரேஷன் கடை கட்டிடம் அமைக்க ரூபாய் 17 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ கலந்துகொண்டு புதிய கட்டிட பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சுனில் குமார், முஞ்சிறை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், குளப்பு mம் ஊராட்சி தலைவர் மனோன்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story