ரூ.20 லட்சம் கையாடல் - விநியோக நிறுவன விற்பனை அலுவலர் கைது

ரூ.20 லட்சம் கையாடல் - விநியோக நிறுவன விற்பனை அலுவலர் கைது
மணிவண்ணன்
தஞ்சாவூரில், ரூ.20 லட்சம் கையாடல் செய்த விநியோக நிறுவன விற்பனை அலுவலரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த அசோகன் (60),. இவர் சிட்கோவில் பெஸ்ட் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுனத்தில், கும்பகோணம் திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன் (40), என்பவர் வீட்டு உபயோகப் பொருட்களை விநியோகம் செய்யும் விற்பனை அலுவலராக பணியாற்றினார். இவர் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் 80 கடைகளில், பொருட்களை விநியோகம் செய்து வந்தார்.

இந்நிலையில் பொருட்கள் விநியோகம் செய்தற்கான உரிய ஆவணங்களையும், வசூலான பணத்தையும் முறையாக அசோகனிடம் வழங்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்து அசோகன் பலமுறை மணிவண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது, 20 லட்சம் ரூபாயை மணிவண்ணன் கையாடல் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக, அசோகன் கடந்த அக்.11ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், புகார் அளித்தார். இந்த புகார் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு காவ‌ல்துறை‌க்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து காவல்துறையினர் கடந்த 4ஆம் தேதி வழக்கு பதிவு செய்து, மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தியதில், 20 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், மணிவண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தஞ்சாவூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story